தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்த்தப்படாது! தொடரும் இலவச மின்சார சலுகைகள் ! தமிழக வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை. வேளாண்,குடிசை மின் இணைப்புகளுக்கு இலவச மின்சார சலுகைகள் தொடரும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மின்வாரியத்திற்காக 1,65,000 ரூபாய் கடன் இருந்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மின்சார ஒழுங்குமுறை வாரியம் தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக தொழில் அமைப்புகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த மின் கட்டண உயர்வு கடந்த செப்டம்பர் மாதம் 12 சதவீதம் முதல் 52 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்துவதில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மின் கட்டண உயர்வினை குறைக்கும் படி கோரிக்கைகள் எழுந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று உயர் அதிகாரிகளிடம் மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி ஆலோசனையை மேற்கொண்டு தமிழக அரசானது வெளியிட்ட அறிக்கையில் “வீட்டு இணைப்பு எவ்வித கட்டண உயர்வும் இல்லை. வேளாண் இணைப்பு, குடிசை வீடுகளுக்கு 100 யூனிட் இலவசம்.கைத்தறி,விசைத்தறி போன்றவைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்” ஆனால் வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்காக மட்டும் யூனிட் 13 பைசா முதல் 21 பைசா வரை மின்சாரம் குறைந்த கட்டணத்தில் உயர்த்தப்படும் எனத் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.