இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் ‘அக நக’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை முதல் பாகத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் மீண்டும் கைப்பற்றியுள்ளது.
இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற 29 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிலையில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகளான ரஜினி மற்றும் கமல் இருவரும் பங்கேற்றனர். மேலும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதே போல் இந்த நிகழ்ச்சியிலும் திரைப்பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் கமல்ஹாசனை அறிவித்துள்ள படக்குழு, அடுத்தடுத்து கலந்துகொள்ளும் மற்ற திரைப்பிரபலங்களை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.