சென்னையில் டிஸ்னி தீம் பார்க் – தமிழ்நாடு சுற்றுலாத்துறை அறிவிப்பு!

சென்னையில் டிஸ்னி தீம் பார்க் – தமிழ்நாடு சுற்றுலாத்துறை அறிவிப்பு!

சென்னையில் டிஸ்னி தீம் பார்க் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் (செப்டம்பர் 26 ) நேற்றைய தினம்  தமிழ்நாடு சுற்றுலாத்துறை மேம்படுத்துவதன் வகையில் ‘தமிழ்நாடு சுற்றுலாக்  கொள்கை 2023’ வெளியிட்டுள்ளார்.  அதன்படி சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் டிஸ்னி தீம் பார்க் அமைப்பதற்காக தமிழக அரசு முடிவு செய்துள்ளது.அமெரிக்காவில் உள்ள டிஸ்னி  லாண்ட் போலவே சென்னையிலும்  அமைய உள்ளது. சென்னை டிஸ்னி தீம் பார்கில் குழந்தைகளுக்காக பல விளையாட்டு அரங்கங்கள், ராட்சத ராட்டினங்கள், நீர் விளையாட்டு வகை மற்றும் அருவிகள் போன்ற அம்சங்கள் இடம் பெற உள்ளது.

இத்தகைய பொழுதுபோக்கு சுற்றுலா தளங்களைத் தமிழ்நாட்டில் அமைப்பதன் மூலம் அந்நிய செலாவணி ஈர்க்கப்படும். மேலும் சென்னையில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையிலும் கட்டமைப்பு  வசதிகள் நடைபெற உள்ளது. வரும் ஐந்தாண்டுகளில் தனியார் பங்களிப்புடன் சென்னையில் டிஸ்னி தீம் பார்க் அமைக்கப்பட உள்ளது. சென்னையில் டிஸ்னி தீம் பார்க்கின் வரவுக்காக சென்னை மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Related post

பெண்களுக்காக இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது!

பெண்களுக்காக இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பைக்‌ கருதி தமிழக அரசு இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் பொருட்டு…
தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

 தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழையால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந் நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணியும் மழைநீர் அகற்றும் பணிகளைத் தமிழக…
சென்னையில் ஃபார்முலா போர் ரேஸ்!

சென்னையில் ஃபார்முலா போர் ரேஸ்!

சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் (ஆகஸ்ட் 30) இன்று முதல் தொடங்கி (செப்டம்பர் 1ஆம்) தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் 10 மணி முதல் 12…