மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நினைவாக ரூ.100 நாணயம் வெளியிடப்படுவதாக தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 1964ஆம் ஆண்டு முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் புகைப்படம் பொருந்திய நாணயம் வெளியிடப்பட்டது.இதைத் தொடர்ந்து காமராஜர் ,அண்ணாதுரை, எம்ஜிஆர் போன்ற தலைவர்களின் புகைப்படம் பொருந்திய நாணயங்களும் வெளியிடப்பட்டன .தற்போது மறைந்த முதல்வர் கலைஞர் அவர்களின் புகைப்படம் பொருந்திய நாணயம் வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நாணயங்களில் ஒருபுறம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் புகைப்படமும் மற்றொரு புறம் தேசிய சின்னமும் 100 ரூபாய் எனப் பொறிக்கப்பட்டு, இந்தியா என ஆங்கிலத்திலும் ,பாரத் என இந்தியிலும் பொறிக்கப்பட்டுள்ளது தற்போது ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்டு ரூ 100 நாணயம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் விரைவில் வெளியிடப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது .