தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் காலாண்டுத்தேர்வு (செப்டம்பர் 15 முதல் 27தேதி வரை) நடைபெறுகிறது. 6 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு (செப்டெம்பர் 19ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை) காலாண்டுத்தேர்வு நடைபெறுகிறது. 11 மற்றும் 12ஆம் வகுப்பு களுக்கான தேர்வுகள் (செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை) நடைபெறுகிறது. இதற்கான வினாத்தாள்கள் SCERT மாநில கல்வி ஆராய்ச்சிகளின் கவுன்சிலிங் பொறுத்து தேர்வு செய்யப்படுகிறது.
காலாண்டு தேர்வுகள் முடிந்தவுடன் (செப்டம்பர் 28 தேதி முதல் அக்டோபர் 2 தேதி வரை ) பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது .காலாண்டு விடுமுறை நாட்களில் அரசு விடுமுறையும் நாட்களும் சேர்த்து வழங்கப்படுவதால் காலாண்டு விடுமுறையை நீட்டிக்க பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் பள்ளி கல்வித்துறையானது விடுமுறை நாட்களில் ‘எவ்வித மாற்றமும் இல்லை’ என அதிகாரபூர்வமாக அறிவிப்பினைத் தெரிவித்துள்ளது.