சந்திரயான் 3 கவுன்டெனில் குரல் கொடுத்த விஞ்ஞானி வளர்மதி காலமானார்! சந்திரயான்- 3 விண்கலத்திற்கு கவுண்டன் குரல் கொடுத்த தமிழக பெண்மணி வளர்மதி ஞாயிற்றுக்கிழமை நேற்றைய தினம் காலமானார். ஸ்ரீ ஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்காக கவுண்டன் குரல் கொடுத்து வந்தவர் விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி வளர்மதி. ஸ்ரீ ஹரிகோட்டாவில் ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. விஞ்ஞானி வளர்மதி இந்தியாவின் சாதனை படைப்பான சந்திரயான்- 3 கம்பீரமான குரலில் கவுண்டன் கொடுத்தவர்.
இதுவே வளர்மதியின் கடைசியான குரலாகும் .இவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் , எனினும் சிகிச்சை பலனின்றி காலமானார். எனவே இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பல அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் எனப் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.