தமிழகத்தில் ‘மணற்கேணி செயலி’ அறிமுகம்! தமிழ்நாட்டில் ‘மணற்கேணி செயலி’ எனும் திட்டத்தினை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக அனைத்துப் பாடங்களையும் காணொளி வாயிலாக வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. ‘மணற்கேணி’ செயலி திட்டத்தில் பாடங்களின் கருப்பொருளை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்க படங்களோடு வடிவமைத்துள்ளது. 1 மற்றும் 12 வகுப்புக்கான பாடங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு வழிகளிலும் ‘மணற் கேணி’ திட்டத்தில் செயலில் விளக்க படங்களோடு உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த மணற்கேணி செயலி வெளியீட்டு விழா செங்கல்பட்டு மாவட்டம் சேலையூரில் உள்ள தாம்பரம் பெருநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் (ஜூலை 25) இன்று மாலை நடைபெறுகிறது. இந்த ‘மணற் கேணி’செயலி திட்டத்தினால் 25 லட்சம் மாணவர்கள் பயனடைவர் என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.