அண்ணா சாலையில் ரூபாய் 621 கோடி உயர்மட்ட மேம்பாலம் சாலையை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூபாய் 621 கோடி செலவில் மேம்பாலம் உயர் மட்டம் மேம்பால சாலையை அமைக்க தமிழக அரசு அரசாணை ( ஜூலை 5) வெளியிட்டுள்ளது. அண்ணாசாலை பகுதியில் போக்குவரத்து நெரிசலால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது . இதனால் ஜெமினி பாலத்தைக் கடந்த உடன் தாம்பரம் ,கிண்டி உள்ள பகுதிகளுக்கு செல்லும் சாலை வழிகளில் பொதுமக்கள் வாகனங்களை இயக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக அண்ணா சாலையின் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையில் ரூபாய் 621 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலம் சாலையை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த உயர்மட்ட சாலை ஆனது எல்டாம்ஸ் சாலை, எஸ் ஐ இ டி கல்லூரி சாலை, சென்டாப் சந்திப்பு ,நந்தனம் சந்திப்பு ,ஜிஐடி சாலை ஆகியவற்றை கடந்தும் அமைக்கப்பட உள்ளது.