விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் 2023 ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பைப்பெற்றது. இத்திரைப்படத்தின் கதை சர்வதேச விழாவில் திரையிடப்பட்டு பாராட்டும் பெற்றதைத் தொடர்ந்து விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகததின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விடுதலை இரண்டாம் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சுவாரியன், அட்டகத்தி தினேஷ் நடித்துள்ளனர்.
இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவதற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் விடுதலை 2 திரைப்படத்தின் ‘தினம் தினமும் ‘ இளையராஜா பாடியுள்ள பாடல் வெளியிடப்பட்டு டீசர்களும் வெளியாகி உள்ளன. இந் நிலையில் ரசிக பெருமக்கள் அனைவரும் விடுதலை 2 திரைப்படத்தை வரவேற்கின்றனர்.
