தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெள்ளம் போன்ற அபாயத்தைத் தடுப்பதற்காக தமிழக அரசின் புதிதாக 876 கிலோ மீட்டர் மழை நீர் வடிகால் அமைத்துள்ளது. மேலும் தூர்வாரூம் பணிகளைச் செய்து வருகிறது. . மழைநீர் தேங்காமல் கண்காணிக்க சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக போக்குவரத்து நெரிசல் மற்றும் மழை நீர் குடியிருப்புகளில் தேங்காமல் தடுப்பதற்காக 044-2345237 இன்றைய எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் பகுதிகளில் உள்ள சுரங்கப் பாதைகளில் தேங்கும் மழை நீரை மோட்டார் கருவிகள் கொண்டு தண்ணீரை அகற்றும் நடவடிக்கைகளைத் தமிழக அரசு செய்து வருகிறது. மேலும் தீயணைப்பு படை, மாநகராட்சி உயர் அலுவலர்கள், ஊழியர்களுக்கு மழை போன்ற வெள்ளங்களில் இன்று பொதுமக்களை பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் படி தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.தற்போது தமிழக அரசால் ” சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.