மகளிர்களுக்கு உரிமை தொகை ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்த தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். குடும்ப தலைவிகளுக்கான ரூ1000 வழங்கும் திட்டம் குறித்து கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி நிதி அமைச்சர் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மகளிருக்கான உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்குப் பல நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளை சமூக நலத்துறை மற்றும் நிதி வருவாய் துறை இணைந்து தகுதியான பயனாளிகளைத் தேர்வு செய்து வருகிறது. இதன் மூலம் தகுதியான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உண்டான மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக ரூபாய் 7000 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இத்திட்டத்திற்கான ஆலோசனையை இன்று தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அவர்கள் தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அதன்படியே மகளிர் உரிமை தொகை ரூபாய் 1000 வரும் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் முதல் நாளிலிருந்து வழங்கப்பட உள்ளது எனத் தகவல்கள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.