தமிழக அரசு பள்ளிகளில் இனி காய்கறி தோட்டம் அமைக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி ‘எனும் திட்டம் மூலம் காய்கறி தோட்டம் அமைக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரசு பள்ளி வளாகத்தில் தோட்டங்கள் அமைக்கப்பட்டு விளையும் காய்கறிகளை சத்துணவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ரூபாய் 5000 வழங்கப்படும். இத்திட்டமானது (2023-2024) கல்வியாண்டில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’என்னும் திட்டத்தில்13,208 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.6 கோடியே 60 லட்சத்து 40 ஆயிரம் நிதி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த திட்டம் முறையாக அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்படுகிறதா என்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலு வலர்கள் கண்காணிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.