சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன்- ரிலீஸ் தேதி மாற்றம்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன்- ரிலீஸ் தேதி மாற்றம்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சாந்தி டாக்கீஸ் நிறுவனத் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில்  உருவாகியுள்ள  திரைப்படம் மாவீரன். இப்படத்தினை மண்டலோ படத்தின் இயக்குனரான மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். கதாநாயகியாக அதிதி ஷங்கரும்,  வில்லனாக மிஸ்கினும் நடித்துள்ளனர். மேலும் யோகி பாபு,சரிதா ,புஷ்பா, வில்லன் சுனில் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசை அமைத்துள்ளார். மாவீரனின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் வருகிற ஜூன் மாதம் இறுதியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்தால் நன்றாக வசூலிக்கலாம் என்று சாந்தி டாக்கீஸ் திட்டமிட்டு இருந்தது.

அதேசமயத்தில் உதயநிதி நடிக்கும் மாமன்னன் திரைப்படம்   திரைக்கு வருவதால் ‘மாவீரன்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதன் காரணமாக மாவீரன் படம் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வெளியாகுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டது. தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 19 தேதி மிக விரைவாக வெளியாகும் எனப் படக் குழுவினரால் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

சட்டம் என் கையில்  செப்டம்பர் 20 ரிலீஸ்!

சட்டம் என் கையில் செப்டம்பர் 20 ரிலீஸ்!

பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் அவர்கள் சட்டம் என் கையில் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி,…
லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பரில் ரிலீஸ்!

லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பரில் ரிலீஸ்!

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து லப்பர் பந்துதிரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட கதைகளமாக உள்ளது. மேலும் இப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால…
சிவகார்த்திகேயன் SK 23 திரைப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் சஞ்சய் தத்!

சிவகார்த்திகேயன் SK 23 திரைப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் சஞ்சய் தத்!

சிவகார்த்திகேயனின் எஸ் கே 23 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் .இந்தத் திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படம் படபூஜையுடன் தொடங்கப்பட்டு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட…