சந்திரயான் 3 ராக்கெட் நாளை ஜூலை 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது. ஆந்திர மாநிலம் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டு வெற்றி பெறுவதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை விஞ்ஞானிகள் சாமி தரிசனம் செய்தனர். சந்திரயான்-3 தனித் தன்மையான லேண்டர் மாடூல், ப்ரொபல்ஷன் மாடூல், ரோவர் ஆகிவை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு (சந்திரயான்- 1) நிலவில் அனுப்பி அங்கு தண்ணீர் இருக்கும் புகைப்படத்தை அது எடுத்துள்ளது. இந்தப் புகைப்படத்தை நாசா நிறுவனத்தின் ஆய்வுவிற்கு வழங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டு சந்திரன் 2 நிலவில் ஏவப்பட்டு அதன் லேண்டர் தரையிறங்கும் போது சந்திரனின் வெளியில் தாறுமாறாக இறங்கியது.
(சந்திரயான்-3) நிலவில் வெற்றிகரமாக ஏவப்படுவதற்கான இஸ்ரோ இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் கடுமையாக ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. மேலும் சந்திரயான்- 3இல் பெறப்படும் தகவல்கள் உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையங்களுக்கு உதவும் என மத்திய அமைச்சர் ஜித்ரேந்திர சிங் தெரிவித்துள்ளார். சந்திரயான் -3 நாளை மதியம் 2 . 35 மணியளவில் விண்ணில் செலுத்துவதற்கான 25 1/2 மணி நேர கவுண்டன் இன்று பகல் 1 மணியிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது என்பதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.