சந்திரயான்-3. நிலவை நோக்கி புறப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திராவில் ஸ்ரீ ஹரி கோட்டா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து சந்திரயான்-3 விண்கலம் இன்று பிற்பகல் 2 .35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. 16 நிமிடத்தில் சந்திரயான் விண்கலம் புவி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. சந்திரயான் -3 விண்கலம் பூமியிலிருந்து 179 கிலோமீட்டர் தொலைவில் பிரிந்தது. ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது லேண்டர். சந்திரயான் சுமந்து செல்லும் LVM MK-3 ராக்கெட்டில் முதல் மூன்று அடுக்குகள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக பிரிந்தது. விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் -3 புவி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைப் நிறுத்தபட்டதை கண்டு விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நிலவை நோக்கி பயணத்தை (சந்திரயான்- 3) தொடங்கியதை இஸ்ரோ தலைவர் சோமநாத் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்தப்பயணம் 48 நாட்களாக தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளாக இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடும் உழைப்பால் உருவான சந்திரயான்- 3 நிலவை நோக்கிய பயணம் வெற்றிகரமாக்கும் என இந்தியாவில் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. நிலவை நோக்கிய பயணத்தில் முன்பே இந்தியா சாதனை புரிந்திருந்தாலும் சந்திரயான்- 3 (48நாட்கள்) வெற்றிகரமாக செயல்படுவதில் இந்தியா முழுமையாக வெற்றி பெறும். சந்திரயான்-3 விண்கலம் இந்தியாவிற்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது.