தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களிலும் ஹெல்த் வாக் சிஸ்டம் எனும் திட்டத்தைத் தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. சமீப காலமாக இளைய சமூகத்தினரிடையே திடீரென மாரடைப்பு பிரச்சனைகள் ஏற்படுகின்றன . இதனை தடுப்பதற்காக தமிழக அரசு பல நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் நவம்பர் 4ஆம் தேதி முதல் 37 மாவட்டங்களிலும் ஹெல்த் விக் சிஸ்டம் தொடங்கப்படுவதாக மக்கள் நல்வாழ்த்துக்கள் என மா. சுபிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ HEALTH WALK 8 Km சிஸ்டம் நடைபெறுகிறது. இதற்காக வருகிற நவம்பர் 4ஆம் தேதி சென்னை பெசன்ட் நகர் பகுதியில் ஹெல்த் வாக் திட்டத்திற்காக நடை பயிற்சி நடைபெறவுள்ளதால் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வாரத்தின் முதல் நாளாக ஞாயிற்றுக்கிழமைகளில் 37 மாவட்டங்களிலும் ஹெல்த் வாக் சிஸ்டம் நடைமுறைப்படுத்தபட உள்ளது என்று அமைச்சர் மா சுபிரமணியன் செய்தியாளரிடம் தெரிவித்தார்.