தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேஷன் கடைகளின் மூலம் நிவாரண தொகைகள் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் ரேஷன் அட்டை இல்லாத குடும்பத்தார்களுக்கும் ரூபாய் 6000 வெள்ள நிவாரண தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. குடும்ப அட்டை இல்லாதவர்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் விண்ணப்பங்களைப் பெற்று, அதில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கு ,வசிக்கும் பகுதி, உரிய ஆவணங்கள் போன்றவற்றைக் கொடுத்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பத்தினை பெற்று ,அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு வெள்ள நிவாரண தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.