மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக நுகர்வோர் உணவு பாதுகாப்பு செல்போன் செயலி மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் சில உணவகங்களில் கெட்டுப்போன ஷவர்மா போன்ற இறைச்சி வகைகளைச் சாப்பிட்டு பொதுமக்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.இதற்கான தமிழக சுகாதாரத் துறை மா. சுப்ரமணியன் தலைமையில் தமிழகத்தில் அனைத்து உணவகங்களிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி15,236 உணவகங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் 572 உணவு கடைகள் தரமற்ற உணவகங்கள் என்று கண்டறியப்பட்டன. இந்த உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி வகைகள், தரமற்ற உணவு வகைகள் பறிமுதல் செய்யப்பட்ட அழிக்கப்பட்டன. மேலும் 23 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு, மக்களிடையே தரமான உணவுகளை பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மேலும் தமிழகத்தில் உள்ள உணவகங்களில் தரமற்ற கெட்டுப் போன உணவுப் பொருட்கள் இருந்தால் நுகர்வோர் உணவு பாதுகாப்பு செல்போன் செயலி மூலம் 9444042322 என்ற எண்ணிற்கு whatsapp மூலம் புகாரினைத் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .