நடிகை    ஊர்வசியின் சார்லஸ் எண்டர்பிரைசஸ் திரைப்படம்   ஜூன் 16      ரிலீஸ்!   தமிழ் திரை உலகின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகருமான ஊர்வசி சார்லஸ் எண்டர்பிரைசஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக  நடித்துள்ளார். இந்தப் படத்தினை அறிமுக இயக்குனர் சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கியுள்ளார். பாலு வர்கீஸ் ,கலையரசன் ,குரு சோமசுந்தரம் மற்றும் அஜித் சங்கர் எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ஸ்வரூப் பிலிப் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.வி.சுப்பிரமணியன் மற்றும் அசோக் பொன்னப்பன் இணைந்து  இசையமைத்துள்ளனர் . 

நகைச்சுவையை முக்கியத்துவம் கொண்ட ‘சார்லஸ் என்டர்பிரைசஸ்’ திரைப்படத்தை ஜாதி மூவி புரொடக்ஷன் சார்பாக அஜித்சாய் தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் நடிகை ஊர்வசி  மூடநம்பிக்கை கொண்ட அம்மா  கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் நட்பு என்பது ஆயுள் வரை இருக்கும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் ரசிகர்களுக்கான என்டர்டைன்மென்ட்   திரைப்படமாக  ‘சார்லஸ் எண்டர்பிரைசஸ்’ இருக்கும்.  ஜூன் 16 திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
