தமிழ்நாட்டில் சாலை விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம்!

தமிழ்நாட்டில் சாலை விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம்!

தமிழ்நாட்டில் அதிநவீன கேமராக்கள் மூலம் சாலை விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம்! மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி சாலை விபத்துக்களைத் தடுப்பதற்காக புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் நடைமுறையில் தமிழக அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் படி சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு முன்பு இருந்ததை விட 3 மடங்கு அதிகமாக அபராதம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் இருப்பது, வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, சிக்னல்களை மீறுவது, ஆம்புலன்ஸ் வழிவிடாமல் செல்லுவது போன்ற விதிமீறல்களுக்கு   ரூ 1,000 எனவும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ 10,000 அபராதம் எனப் பல மடங்காக உயர்த்தி உள்ளது.. மத்திய அரசின் அறிவுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்தை கண்காணிக்க அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு  வருகின்றன.

தற்போது பொருத்தப்பட்டு வரும் அதி நவீன கேமராக்கள்    தெள்ளத் தெளிவாகவும் ,துல்லியமாகவும், பல கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் வாகன ஓட்டுனர்களின் முகங்களை தெளிவாக காட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் குற்ற செயலில் ஈடுபவர்கள் கண்டுபிடிப்பதில் மிக எளிதாக உள்ளது. தமிழக சாலை பகுதிகளில் அதி நவீன சிசிடிவி கேமரா, போலீஸ்காரில் டேஷ் போர்டு கேமரா, போக்குவரத்து காவலர் உடம்பில் கேமரா எனப் பொருத்தப்பட்டு தமிழக அரசு போக்குவரத்தினை கண்காணிக்க நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் போக்குவரத்து விதிகளை  மீறுபவருக்கு கேமராக்களின் வீடியோ பதிவின் மூலம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Related post

சென்னையில் உரிமம் இல்லாமல் நாய் வளர்ப்பவர்களுக்கு ரூபாய்1000 அபராதம்!

சென்னையில் உரிமம் இல்லாமல் நாய் வளர்ப்பவர்களுக்கு ரூபாய்1000 அபராதம்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் 2 வளர்ப்பு நாய்கள் சுரக்ஷா என்ற சிறுமியைக் கடித்து குதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து சிறுமிக்கு சென்னை மாநகராட்சி சார்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு…
தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல்…

தமிழக அரசின் ‘நீங்கள் நலமா? திட்டம்’ மார்ச் -6 ஆம் தேதி இன்று முதல் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்தப் புதிய திட்டம் தமிழக மக்களை நேரடியாக…
SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

தமிழகத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள SETC பேருந்தில் புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.. சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அரசு பேருந்துகளில்…