தமிழக அரசு பள்ளிகளில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம்’ தொடக்கம் !

தமிழக அரசு பள்ளிகளில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம்’ தொடக்கம் !

தமிழக அரசு பள்ளிகளில் இனி காய்கறி தோட்டம் அமைக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி ‘எனும் திட்டம் மூலம் காய்கறி தோட்டம் அமைக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரசு பள்ளி வளாகத்தில் தோட்டங்கள் அமைக்கப்பட்டு விளையும் காய்கறிகளை சத்துணவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ரூபாய் 5000 வழங்கப்படும். இத்திட்டமானது (2023-2024) கல்வியாண்டில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’என்னும் திட்டத்தில்13,208 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.6 கோடியே 60 லட்சத்து 40 ஆயிரம் நிதி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த திட்டம் முறையாக அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்படுகிறதா என்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலு வலர்கள் கண்காணிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Related post

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல்…

தமிழக அரசின் ‘நீங்கள் நலமா? திட்டம்’ மார்ச் -6 ஆம் தேதி இன்று முதல் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்தப் புதிய திட்டம் தமிழக மக்களை நேரடியாக…
SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

தமிழகத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள SETC பேருந்தில் புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.. சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அரசு பேருந்துகளில்…
ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த  தகுதியானவர்களுக்கு  6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்…

 ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை ,திருவள்ளூர்,…