தமிழக அரசின் ‘நீங்கள் நலமா? திட்டம்’ மார்ச் -6 ஆம் தேதி இன்று முதல் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்தப் புதிய திட்டம் தமிழக மக்களை நேரடியாக சென்றடையும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், தலைமை செயலாளர், அனைத்து துறைச் செயலாளர்கள் மக்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு மக்களின் குறைகளையும் கருத்துக்களை கேட்டறிந்து தமிழக அரசிடம் தெரிவிப்பர். இந்தத் தரவுகளைக் கொண்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்” முதலமைச்சராகிய நானே நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு மக்களின் குறைகளை கேட்டுறிவேன்” எனத் தெரிவித்துள்ளார்.