தமிழகம் முழுவதும் Smoking roomக்குத் தடை – தமிழக அரசு அறிவிப்ப

தமிழகம் முழுவதும் Smoking roomக்குத் தடை – தமிழக அரசு அறிவிப்ப

தமிழகத்தில் இயங்கி வரும் உணவு கூடங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட பல இடங்களில் புகை பிடிப்பதற்காக தனியிடம் திறக்க தடை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு புகைப்பிடித்தலையும்,எச்சில் உ மிழ்வதையும் தடை செய்யும் சட்டம் 2002ன் படி கொண்டுவரப்பட்டது எனினும் இதை மீறி பலர் புகைபிடித்தலை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ‌தமிழகத்தில் புகைபிடிக்கும் அறையைத் திறக்க தடை விதிப்பு சட்டத்தினை தமிழக அரசு அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது.

டாஸ்மார்க் கடைகளைத் தவிர டீக்கடைகள் ,உணவகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் புகை பிடிப்பதற்கான தனியிடம் வைக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு விதிகளை மீறி புகை பிடிக்கும் கூடத்தை நடத்தினால் அந்த கடையின் உரிமையாளர்களுக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் முதன்மை சட்டம் 21 ஏ பிரிவின்படி புகை குழல் கூடாம் நடத்துவதற்கான தண்டனை 4ஏ ஆம் மீறுபவர்களுக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் 20,000 முதல் 50,000 வரை அபராதம் நீட்டிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்படும் என்று தமிழக அரசு இன்று அரசாணையைப் பிறப்பித்துள்ளது.

Related post

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல்…

தமிழக அரசின் ‘நீங்கள் நலமா? திட்டம்’ மார்ச் -6 ஆம் தேதி இன்று முதல் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்தப் புதிய திட்டம் தமிழக மக்களை நேரடியாக…
SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

தமிழகத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள SETC பேருந்தில் புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.. சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அரசு பேருந்துகளில்…
ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த  தகுதியானவர்களுக்கு  6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்…

 ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை ,திருவள்ளூர்,…