தமிழகத்தில் இயங்கி வரும் உணவு கூடங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட பல இடங்களில் புகை பிடிப்பதற்காக தனியிடம் திறக்க தடை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு புகைப்பிடித்தலையும்,எச்சில் உ மிழ்வதையும் தடை செய்யும் சட்டம் 2002ன் படி கொண்டுவரப்பட்டது எனினும் இதை மீறி பலர் புகைபிடித்தலை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் புகைபிடிக்கும் அறையைத் திறக்க தடை விதிப்பு சட்டத்தினை தமிழக அரசு அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது.
டாஸ்மார்க் கடைகளைத் தவிர டீக்கடைகள் ,உணவகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் புகை பிடிப்பதற்கான தனியிடம் வைக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு விதிகளை மீறி புகை பிடிக்கும் கூடத்தை நடத்தினால் அந்த கடையின் உரிமையாளர்களுக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் முதன்மை சட்டம் 21 ஏ பிரிவின்படி புகை குழல் கூடாம் நடத்துவதற்கான தண்டனை 4ஏ ஆம் மீறுபவர்களுக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் 20,000 முதல் 50,000 வரை அபராதம் நீட்டிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்படும் என்று தமிழக அரசு இன்று அரசாணையைப் பிறப்பித்துள்ளது.