சென்னையில் டிஸ்னி தீம் பார்க் – தமிழ்நாடு சுற்றுலாத்துறை அறிவிப்பு!

சென்னையில் டிஸ்னி தீம் பார்க் – தமிழ்நாடு சுற்றுலாத்துறை அறிவிப்பு!

சென்னையில் டிஸ்னி தீம் பார்க் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் (செப்டம்பர் 26 ) நேற்றைய தினம்  தமிழ்நாடு சுற்றுலாத்துறை மேம்படுத்துவதன் வகையில் ‘தமிழ்நாடு சுற்றுலாக்  கொள்கை 2023’ வெளியிட்டுள்ளார்.  அதன்படி சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் டிஸ்னி தீம் பார்க் அமைப்பதற்காக தமிழக அரசு முடிவு செய்துள்ளது.அமெரிக்காவில் உள்ள டிஸ்னி  லாண்ட் போலவே சென்னையிலும்  அமைய உள்ளது. சென்னை டிஸ்னி தீம் பார்கில் குழந்தைகளுக்காக பல விளையாட்டு அரங்கங்கள், ராட்சத ராட்டினங்கள், நீர் விளையாட்டு வகை மற்றும் அருவிகள் போன்ற அம்சங்கள் இடம் பெற உள்ளது.

இத்தகைய பொழுதுபோக்கு சுற்றுலா தளங்களைத் தமிழ்நாட்டில் அமைப்பதன் மூலம் அந்நிய செலாவணி ஈர்க்கப்படும். மேலும் சென்னையில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையிலும் கட்டமைப்பு  வசதிகள் நடைபெற உள்ளது. வரும் ஐந்தாண்டுகளில் தனியார் பங்களிப்புடன் சென்னையில் டிஸ்னி தீம் பார்க் அமைக்கப்பட உள்ளது. சென்னையில் டிஸ்னி தீம் பார்க்கின் வரவுக்காக சென்னை மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Related post

சென்னை ஐகோர்ட்டுக்கு 30 நாட்கள் விடுமுறை !

சென்னை ஐகோர்ட்டுக்கு 30 நாட்கள் விடுமுறை !

சென்னை உயர் நீதிமன்றத்திற்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மே 1-ஆம் தேதி முதல் ஜூன்-2ஆம் தேதி வரை 30 நாட்கள் எனக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற…
சென்னை தி நகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் !

சென்னை தி நகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் !

சென்னை தி.நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளதால்…
தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல்…

தமிழக அரசின் ‘நீங்கள் நலமா? திட்டம்’ மார்ச் -6 ஆம் தேதி இன்று முதல் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்தப் புதிய திட்டம் தமிழக மக்களை நேரடியாக…