சந்திரயான் -3 விண்கலம் (ஆகஸ்ட்5 )ஆம் தேதி அன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு நிலவில் நீள் வட்ட பாதையில் நுழைந்தது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்தியாவில் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தனது கனவு திட்டமான சந்திரயான் 3 கடந்த மாதம் ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட்டது. இதைத்தொடர்ந்து சந்திரியான் 3 தனது பாதையில் சரியாக சென்று கொண்டிருக்கிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் மூன்றாவது முயற்சியான சந்திரயான்- 3 ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 7 மணியளவில் பூமியிலிருந்து நீள் வட்ட பாதையில் பிரிந்து நிலவின் ஆர்பிட் பகுதியில் நுழைந்தாகவும்,தற்போது நிலவுக்கு 4300 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதாக இஸ்ரோ தகவலை அறிவித்துள்ளது. மேலும் சந்திரயான் – 3 விண்கலம் நிலவின் தோற்றத்தைக் குறித்தும் வீடியோ ஒன்றினை இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் நேற்று வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வருகிற ஆகஸ்ட் 23தேதி நிலவில் மெல்ல மெல்லமாக தரையிறங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்து வருகிறது.