சந்திரயான் 3 ராக்கெட் நாளை ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது!

சந்திரயான் 3 ராக்கெட் நாளை ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது!

சந்திரயான் 3 ராக்கெட் நாளை ஜூலை 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது. ஆந்திர மாநிலம் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டு வெற்றி பெறுவதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை  விஞ்ஞானிகள் சாமி தரிசனம் செய்தனர். சந்திரயான்-3 தனித் தன்மையான லேண்டர் மாடூல், ப்ரொபல்ஷன் மாடூல், ரோவர் ஆகிவை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு (சந்திரயான்- 1)    நிலவில் அனுப்பி அங்கு  தண்ணீர் இருக்கும் புகைப்படத்தை அது எடுத்துள்ளது. இந்தப் புகைப்படத்தை நாசா நிறுவனத்தின் ஆய்வுவிற்கு  வழங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டு சந்திரன் 2 நிலவில் ஏவப்பட்டு அதன் லேண்டர் தரையிறங்கும் போது சந்திரனின் வெளியில் தாறுமாறாக  இறங்கியது.

(சந்திரயான்-3) நிலவில் வெற்றிகரமாக   ஏவப்படுவதற்கான இஸ்ரோ இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் கடுமையாக  ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. மேலும் சந்திரயான்- 3இல் பெறப்படும் தகவல்கள் உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையங்களுக்கு உதவும் என மத்திய அமைச்சர் ஜித்ரேந்திர சிங் தெரிவித்துள்ளார். சந்திரயான் -3 நாளை  மதியம் 2 . 35 மணியளவில் விண்ணில் செலுத்துவதற்கான 25 1/2 மணி நேர கவுண்டன் இன்று பகல் 1 மணியிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது என்பதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Related post

சமுத்ரயான் திட்டம்  2025 ஆம் ஆண்டுக்குள் தொடங்கப்படும்!

சமுத்ரயான் திட்டம் 2025 ஆம் ஆண்டுக்குள் தொடங்கப்படும்!

சந்திரயான் -3 நிலவுக்குச் செலுத்தப்பட்டு இந்தியாவின் வெற்றி பாதையாக அமைந்ததுள்ளது.. இதைத் தொடர்ந்து கடலுக்குள் மனிதர்களை அனுப்பும் திட்டமாக சமுத்ரயான் திட்டம் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடலுக்கு…
சந்திரயான் 3 கவுன்டெனில் குரல் கொடுத்த விஞ்ஞானி வளர்மதி காலமானார்!

சந்திரயான் 3 கவுன்டெனில் குரல் கொடுத்த விஞ்ஞானி வளர்மதி காலமானார்!

சந்திரயான் 3 கவுன்டெனில் குரல் கொடுத்த விஞ்ஞானி வளர்மதி காலமானார்! சந்திரயான்- 3 விண்கலத்திற்கு கவுண்டன் குரல் கொடுத்த  தமிழக பெண்மணி வளர்மதி ஞாயிற்றுக்கிழமை நேற்றைய தினம் காலமானார்.…
சந்திரயான் 3  விண்கலம் நிலவின் தோற்ற  புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு

சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தோற்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு

சந்திரயான் -3 விண்கலம் (ஆகஸ்ட்5 )ஆம் தேதி அன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு நிலவில் நீள் வட்ட பாதையில் நுழைந்தது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்தியாவில் விண்வெளி…