சந்திரயான்-3 நிலவை நோக்கி புறப்பட்டது!

சந்திரயான்-3 நிலவை நோக்கி புறப்பட்டது!

 சந்திரயான்-3. நிலவை நோக்கி புறப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது.  ஆந்திராவில் ஸ்ரீ ஹரி கோட்டா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து சந்திரயான்-3 விண்கலம் இன்று பிற்பகல் 2 .35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. 16 நிமிடத்தில் சந்திரயான் விண்கலம் புவி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.  சந்திரயான் -3 விண்கலம் பூமியிலிருந்து 179 கிலோமீட்டர் தொலைவில் பிரிந்தது. ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது லேண்டர். சந்திரயான் சுமந்து செல்லும் LVM MK-3 ராக்கெட்டில் முதல் மூன்று அடுக்குகள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக பிரிந்தது. விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் -3 புவி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைப் நிறுத்தபட்டதை கண்டு விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நிலவை நோக்கி பயணத்தை  (சந்திரயான்- 3) தொடங்கியதை இஸ்ரோ தலைவர் சோமநாத் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.  இந்தப்பயணம் 48 நாட்களாக தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளாக இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடும் உழைப்பால் உருவான சந்திரயான்- 3 நிலவை நோக்கிய பயணம்   வெற்றிகரமாக்கும் என இந்தியாவில் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. நிலவை நோக்கிய பயணத்தில் முன்பே இந்தியா சாதனை புரிந்திருந்தாலும் சந்திரயான்- 3 (48நாட்கள்) வெற்றிகரமாக செயல்படுவதில் இந்தியா முழுமையாக வெற்றி பெறும்.  சந்திரயான்-3 விண்கலம் இந்தியாவிற்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது.

Related post

சமுத்ரயான் திட்டம்  2025 ஆம் ஆண்டுக்குள் தொடங்கப்படும்!

சமுத்ரயான் திட்டம் 2025 ஆம் ஆண்டுக்குள் தொடங்கப்படும்!

சந்திரயான் -3 நிலவுக்குச் செலுத்தப்பட்டு இந்தியாவின் வெற்றி பாதையாக அமைந்ததுள்ளது.. இதைத் தொடர்ந்து கடலுக்குள் மனிதர்களை அனுப்பும் திட்டமாக சமுத்ரயான் திட்டம் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடலுக்கு…
சந்திரயான் 3 கவுன்டெனில் குரல் கொடுத்த விஞ்ஞானி வளர்மதி காலமானார்!

சந்திரயான் 3 கவுன்டெனில் குரல் கொடுத்த விஞ்ஞானி வளர்மதி காலமானார்!

சந்திரயான் 3 கவுன்டெனில் குரல் கொடுத்த விஞ்ஞானி வளர்மதி காலமானார்! சந்திரயான்- 3 விண்கலத்திற்கு கவுண்டன் குரல் கொடுத்த  தமிழக பெண்மணி வளர்மதி ஞாயிற்றுக்கிழமை நேற்றைய தினம் காலமானார்.…
சந்திரயான் 3  விண்கலம் நிலவின் தோற்ற  புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு

சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தோற்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு

சந்திரயான் -3 விண்கலம் (ஆகஸ்ட்5 )ஆம் தேதி அன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு நிலவில் நீள் வட்ட பாதையில் நுழைந்தது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்தியாவில் விண்வெளி…