பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் அவர்கள் சட்டம் என் கையில் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா மற்றும் ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘சிக்ஸர்’ திரைப்படத்தை இயக்கிய சாட்சி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து விரைவாக சட்டம் என் கையில் திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் என நடிகர் சதீஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.