இந்தியன் 2 திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்!

இந்தியன் 2 திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்!

இந்தியன் 2 திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்.  உலக நாயகன்  கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.  ‘இந்தியன் 2’ திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் ஏ.ஆர் ரகுமான்  மற்றும் அனிருத் இருவரும் இணைந்து இசையமைத்து வருகின்றனர். ஸ்ரீகர் பிரசாந்த் இப்படத்தில் படத்தொகுப்பு செய்துள்ளார். நடிகர் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்தில் சமுத்திரகனி, பாபி சிம்கா, சித்தார்த் ,ராகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்பட பல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.

மேலும் மறைந்த நகைச்சுவை நடிகர்களான சின்ன கலைவாணர் விவேக் மற்றும் குணச்சித்திர நடிகர் மனோபாலா சில காட்சிகளில் நடித்துள்ளனர். ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் மெயின் வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார். இந்தியன் 2 திரைப்படம் 250 கோடி  செலவில் உருவாகியுள்ளது. 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘இந்தியன் 2’ திரைப்படம்  சில காரணங்களால்  நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது முடிவடைய உள்ளது. இந்தப் படத்தின் தொழில்நுட்ப பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகளை வெளிநாட்டில் இயக்குனர் சங்கர் விறுவிறுவாக   மேற்கொண்டு வருகிறார். எனவே ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் பொங்கலுக்கு ‘இந்தியன் 2’ திரைப்படம் வெளியாகும் எனப் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related post

ஆர் .ஜே பாலாஜி நடிக்கும் சொர்க்கவாசல் திரைப்படம் நவம்பரில் ரிலீஸ்!

ஆர் .ஜே பாலாஜி நடிக்கும் சொர்க்கவாசல் திரைப்படம் நவம்பரில் ரிலீஸ்!

நடிகர் ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக சொர்க்கவாசல் திரைப்படத்தில் நடித்துள்ளார். பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநரான சித்தார்த் விஸ்வநாதன் இயக்கியுள்ளார்.கருணாஸ், செல்வராகவன் மற்றும் பாலாஜி சக்திவேல் முக்கிய கதாபாத்திரத்தில்…
சட்டம் என் கையில்  செப்டம்பர் 20 ரிலீஸ்!

சட்டம் என் கையில் செப்டம்பர் 20 ரிலீஸ்!

பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் அவர்கள் சட்டம் என் கையில் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி,…
லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பரில் ரிலீஸ்!

லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பரில் ரிலீஸ்!

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து லப்பர் பந்துதிரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட கதைகளமாக உள்ளது. மேலும் இப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால…