19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள ஹங்சோ நகரில் வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது .. கடந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெற இருந்த இந்த ஆசிய விளையாட்டுப் போட்டி கொரோனா தொற்றால் தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது 19ஆவதுஆசிய விளையாட்டு போட்டியானது இந்த வருடம் 2023 (செப் 23 முதல் தொடங்கப்பட்டு அக்டோபர் 8ஆம் தேதி வரை )நடைபெறுகிறது. இந்த ஆசிய விளையாட்டு போட்டியானது நூறு மீட்டர் ஓட்டம் ,ஈட்டி எறிதல், ஹாக்கி கபடி என்ற 40 விளையாட்டுகளாக 61 பிரிவுகளில் நடைபெறுகிறது. இந்தியாவில் 634 வீர, வீராங்கனைகள் 38 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். உலகளாவிய நாடுகளில் 45 நாடுகள் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று மொத்தம் 12 ஆயிரம் வீர,வீராங்கனைகள் பங்கேற்கின்றன.. இதற்காக வெற்றி பெறும் நபர்களுக்காக 481 தங்கப் பதக்கங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.