வெள்ள நிவாரண தொகையை ரொக்கமாக வழங்கலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வெள்ள நிவாரண தொகையை வங்கி கணக்கு செலுத்த உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது .இந்த நிலையில் உயர்நீதிமன்றமானது இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது- வெள்ள நிவாரண நிதி உடனடியாக பொதுமக்களுக்குத் தேவைப்படுகிறது .எனவே வெள்ள நிவாரன் தொகை ரொக்கமாக வழங்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது . இந்த நிலையில் வெள்ள நிவாரண தொகை ரூபாய் 6,000த்தை 5 நாட்களில் கொடுத்து முடிக்கபடும்.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் டோக்கன்கள் பதினாராம் தேதி முதல் வழங்கப்பட்டு டிசம்பர் 17ஆம் தேதி முதல் 5 நாட்களில் வெள்ள நிவாரணத் தொகை அளிக்கும் பணி தொடங்கி முடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.