இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் அனுப்பப்படும் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. எனவே பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியா உலகிலுள்ள 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதியை செய்து வருகிறது .உலகளாவிய நாடுகளில் அரிசி ஏற்றுமதிக்கு 40% பங்கை இந்தியா கொண்டுள்ளது . கடந்த 2022 ஆம் ஆண்டு 17.86 மில்லியன் டன் அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. தற்போது வடமாநிலங்களில் பருவநிலை மாற்றத்தால் மழை பெய்து வருகிறது. எனவே ஒரு சில வாரங்களாக அத்தியாவசிய பொருட்களான காய்கறி ,பால், கோதுமை மற்றும் அரிசி போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்தப் பருவ மழை காரணமாக வட மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் நெல் சாகுபடியில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
மேலும் மேற்குவங்கம் ,மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நெல் விதைப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 10 நாட்களில் அரிசியின் விலை 20% அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அரிசியின் விலையை கட்டுக்குள் கொண்டு வரவும், உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்யவும் ,அரிசி ஏற்றுமதி தடை என்ற நடவடிக்கைகளை மத்திய அரசு கொண்டுள்ளது. எனவே பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி வகைகளை உலகளாவிய அரிசி ஏற்றுமதிக்கு தடை செய்து மத்திய அரசு உத்தரவு விதித்துள்ளது.