விஸ்வகர்மா யோஜனா திட்டம் வருகிறசெப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் மோடி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். டெல்லியில் துவாரகாவில் உள்ள இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் விஸ்வகர்மா திட்டம் தொடங்கயிருக்கிறது. கைவினை தொழில் செய்பவர்கள், பழங்கால பாரம்பரிய கலாச்சாரம் தொழிலில் ஈடுபடும் கலைஞர்கள் போன்றவர்களுக்காக இத்திட்டத்தினைப் பிரதமர் மோடி கொண்டுவந்துள்ளார். . பிரதமர் மந்திரி விஸ்வகர்மா என்ற பெயரில் ரூபாய் 13,000 கோடி செலவில் கைவினை கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளது. மேலும் பயோமெட்ரிக் அடிப்படையில் விஸ்வகர்மா திட்டத்தில் இணையம் வழியாக பல கிராமங்களில் உள்ள கைவினை கலைஞர்கள் இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டை ,பயிற்சிகள் பல்வேறு கைவினை தொழில் செய்யும் கலைஞர்களுக்கு நிதியுதவிகள், ஊக்கத்தொகைகள் வழங்கப்படுகிறது. மேலும் பாரம்பரியம், கலாச்சாரம்,கைவினைத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு1 லட்சம் மற்றும் 2 லட்சம் கடன் உதவி தவணைகளில் வழங்கப்படுகிறது.