தமிழகத்தில் வருகிற செப்டம்பர் ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப வீடுகளிலும் தெருகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு அனைத்து குடும்பகளிலும் தெருகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து பிரதிச்சை செய்து வழிபடுவர்.இந்த வருடம் 2024-இல் (5051 சிலைகள்) செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்து மத சார்பில் காவல்துறையிடம் அனுமதி கோரி வருகின்றனர்.
தமிழகத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதில் புதிய கட்டுப்பாடுகளை டிஜிபி சங்கர் சிவால் விதித்துள்ளார். அதன்படி அதில், விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி, ரசாயன கலவை இல்லாத சிலைகளைகளாக இருக்க வேண்டும். விநாயகர் சிலைகள் மேடையுடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிற மத ஸ்தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலைகளை வைக்க கூடாது. மதவெறி தூண்டும் வகையில், இருக்கக் கூடாது! என அதிரடியான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.