உத்திர பிரதேசம் வாரணாசியில் நவீன உலக தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப்டம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை) அடிக்கல் நாட்டுகிறார். இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் 30 ஏக்கர பரப்பளவில் அமைய உள்ளது. இதற்காக 450 கோடி மதிப்பில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது. இந்த சர்வதேச மைதானம் திரிசூலம் ,விளக்கு கோபுரங்கள், உடுக்கை வடிவில் ,பிறை நிலா வடிவில் போன்ற திரு சிவபெருமான் கடவுளை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட உள்ளது.மேலும் சுமார் 30,000 பார்வையாளர்கள் அமரும் வகையில் திறம்பட உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கமாக வடிவமைக்கப்பட உள்ளது. இந்த விளையாட்டு அரங்கத்தை கட்டி முடிக்க முப்பது மாதங்கள் திட்டமிடப்பட்டுள்ளது .
மேலும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே நாளை சச்சின் டெண்டுல்கர் கபில்தேவ் ,சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று கலந்து கொள்ள இருக்கிறார்கள்.