வட சென்னை 2-ஆம் கட்ட வளர்ச்சி திட்டப் பணி விழாவை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் 2-ஆம் கட்டமாக ரூ.1,383 கோடியில் 79 புதிய திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வீட்டுவசதி, நகராட்சி நிர்வாகம், எரிசக்தி, மருத்துவம் மற்றும் உள்துறை பணிகள் உள்ளடங்கும். இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் வெள்ளத்திலிருந்து சென்னையை மீட்டு உள்ளோம் என்றார்.
அதைத்தொடர்ந்து வடசென்னை வளர்ச்சி திட்டப் பணிகளைத் தெரிவித்தார்.மேலும் வடசென்னை இரண்டாம் கட்ட வளர்ச்சி திட்ட விழாவில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், வடசென்னை எம்.பி மற்றும் கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள், வீட்டுவசதி துறை செயலர் காகர்லா உஷா, பல கட்சித் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.