யோகி பாபு நடிப்பில் ஸ்கூல் திரைப்படம்!

யோகி பாபு நடிப்பில் ஸ்கூல் திரைப்படம்!

ஸ்கூல் திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான யோகிபாபு, பூமிகா சாவ்லா, பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்கிறார்கள் . மேலும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.ஸ்கூலில் நடைபெறும் காட்சிகளைக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார்.

மாணவர்களிடம் எளிமையாக பழகி அவர்களை நல்வழிக்கு நடத்திச் செல்லும் ஆசிரியராக யோகி பாபுவும், நடித்துள்ளார்.பள்ளி மாணவ மாணவிகளின் கண்ணோட்டத்தில் சமுதாயத்தில் நடக்கும் கொலை ,தற்கொலை, விபத்து, கலவரம் போன்ற பல முக்கியமான கிரைம் சம்பவங்களைப் பற்றி ஆராயும் விதமான திரைப்படமாக இக்கதை உருவாகி வருகிறது. இந் நிலையில் ஸ்கூல் திரைப்படம் விரைவாக திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Related post

யோகி பாபு நடிக்கும் தூக்குதுரை படத்தின்  ட்ரெய்லர்கள் வெளியீடு!

யோகி பாபு நடிக்கும் தூக்குதுரை படத்தின் ட்ரெய்லர்கள் வெளியீடு!

யோகி பாபு நடிக்கும் தூக்குதுரை படத்தின்  ட்ரெய்லர்கள் வெளியீடு!  நகைச்சுவை நடிகர் யோகி பாபு தூக்குதுரை திரைப்படத்தில்  கதாநாயகனாக நடித்துள்ளார்.  தூக்குதுரை திரைப்படம் டென்னிஸ் மஞ்சுநாத்   இயக்கத்தில் உருவாகியுள்ளது.…