சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் பயணம் செய்வதற்காகவும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.அதன்படி, தமிழகம் முழுவதும் சென்னை பெருநகரங்களிலும் முதற்கட்டமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கி 9 ஆண்டு நிறைவடைந்து பத்தாம் ஆண்டு அடியடுத்து வைக்கிறது.
கடந்த ஆண்டுகளில் மெட்ரோ ரயிலில் 29 கோடியே 87 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனா் எனச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந் நிலையில் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு மெட்ரோ ரயில்களில் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, கியூ ஆா் குறியீடு மூலம் பயணம் செய்தால் 20 சதவீதம் சலுகை வழங்கப்படும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் சோமநாத் தெரிவித்துள்ளார்.