முதல்வரின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியை ஜெயம் ரவி திறந்து வைத்தார்.திருவண்ணாமலையில் (மே 11) ஆம்தேதி காந்திநகர் புறவழி சாலையில் உள்ள மைதானத்தில் ஏழு நாட்களாக நடைபெற உள்ள தமிழக முதல்வர் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியை பொதுப்பணித்துறை எ.வ வேலு தலைமையில் நடிகர் ஜெயம் ரவி திறந்து வைத்தார். இந்த கண்காட்சியில் 14 வயது முதல் பொது வாழ்வில் பயணித்து 56 ஆண்டுகளைக் கடந்த நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு குறித்த அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி ‘ தமிழக முதலமைச்சரின் சாதனைகளை சினிமாவில் இருப்பது போன்ற சகாப்தத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்திய உணர்வை இந்தப் புகைப்பட கண்காட்சியின் முன்னோட்டம் ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்தார். மேலும் மக்களின் பொது நலனுக்காக முதல்வர் மக்களிடையே பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளார் என்று கூறி இந்த கண்காட்சியில் கலந்து கொண்டதில் பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்தார். மேலும் இந்த சிறப்பான முறையில் அமைக்கப்பட்ட தமிழக முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு குறித்த கண்காட்சியை நடிகர் ஜெயம் ரவி, பொது பணித்துறை எ.வ வேலு ,மற்றும் சிறுபான்மை மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் பார்வையிட்டு கண்டு ரசித்தனர்.