லஞ்சம் வாங்கும் மின்அதிகாரிகளுக்கு கடும் நடவடிக்கை. மின்வாரியத்துறை -எச்சரிக்கை. மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மின்வாரியத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் புதிய மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருந்தது. மேலும் தமிழகத்தில் உள்ள வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின்சாரம் கணக்கிடப்படுகிறது. தமிழக வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 100 யூனிட் வரை இலவசமாகவும் ,500 யூனிட் வரையிலாக மானிய விலை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள வீடுகளில் மின் இணைப்பு அதிகாரிகளும் ஊழியர்களும் லஞ்சம் வாங்குவதாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் புகார் எழுந்து வந்தது. எனவே மின்வாரிய தலைமை விஜி லென்ஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்கும் நபரை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். லஞ்சம் வாங்கும் நபர் புகார் ஆதாரங்களுடன் பெறப்பட்டால் 10 நாட்களில் லஞ்சம் ஒழிப்புத்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியத்துறை தெரிவித்துள்ளது.
லஞ்சம்