புதிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டுத்தொடர் செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தக் கூட்டுத்தொடரின் இரண்டாவது நாளில் மகளிர்களுக்கான இட ஒதுக்கீடு 33% அர்ஜுன் ராம் மேக் வால் தாக்கல் செய்தார். இதைக் குறித்து எதிர்ப்பு எழுந்த நிலையில் விவாதங்கள் ஏற்பட்டது. எனவே புதிய நாடாளுமன்றத்தில் நான்காவது நாளான இன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து இன்று விவாதம் நடைபெற்றதைத் தொடர்ந்து மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்கள் பேசி விவாதித்தனார்.
இதைக் குறித்து வாக்கெடுப்புகள் 7 1/2மணி நேரம் நடைபெற்றது. இதில் மகளிர் இட ஒதுக்கீடு 33% மசோதா மக்களவையில் இன்று நிறைவேறப்பட்டுள்ளது. இந்த மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றதில் 454 பேர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.