மத்திய பிரதேசத்தில் விவசாயத் தொழில்கள் ட்ரோன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் மத்திய பிரதேசத்தில் விவசாயத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.மத்திய பிரதேசத்தில் விவசாய தொழில்களில் விதைத்தூவல் பணிகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தல் போன்ற பணிகளுக்கு ட்ரோன்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள ட்ரோன்களுக்கு 75% மானியம் மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு எந்தவித ஒரு பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு அதிகாரி யுத்தி ஷர்மா தெரிவித்துள்ளார்.
விவசாய தொழிலில் கடினம் ஏதுமின்றி விரைந்து பணிகள் முடிக்கப்படுவதால் ட்ரோன்களை விவசாயிகள் ஆர்வத்துடன் வரவேற்கின்றனர். ட்ரோன்களின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுவதாக மத்திய அரசு அதிகாரி யுத்தி ஷர்மா தெரிவித்துள்ளார்.