மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்- தமிழ்நாடு அனுமதி வழங்காது!

மதுரையில்  டங்ஸ்டன் சுரங்கம்- தமிழ்நாடு அனுமதி வழங்காது!

 மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் (Hindustan Zinc) நிறுவனத்திற்கு மத்திய சுரங்கத் துறை ஏலம் வழங்கப்பட்டது.டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்காக மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, மேலூர், சுருளிப்பட்டி, கிடாரிப்பட்டி, நாயக்கர் பட்டி, தெற்கு தெரு மற்றும் வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட 11 கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள் மற்றும் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் டங்சன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்யுமாறு தமிழகஅரசிடம் தெரிவித்து வந்தனர்.

இந் நிலையில் மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி தராது டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஆய்வுக்குகூட அனுமதி தர மாட்டோம். மக்கள் விரும்பாத திட்டம் எதையும் தமிழ்நாடு அரசு கொண்டு வராது எனத் திட்டவட்டமாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related post