மதுரை மாவட்டத்தில் உள்ள சரவணா செல்வரத்தினம் கடைக்குப் பத்தாயிரம் ரூபாய் தமிழக அரசு விதித்துள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்காக பல நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில், மதுரை மாநகராட்சி 72 உட்பட்ட பகுதி மாநகர அலுவலர் வினோத்குமார் தலைமையில் டெங்கு தடுப்பு பணி ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் முழுவதும் மாநகர சார்பில் 530 டெங்கு தடுப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு டெங்கு கொசுக்கள் ஒழிப்பு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள சரவணா செல்வரத்தினம் கடையில் தேவையற்ற பழைய பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் தேக்கி வைத்திருந்த காரணத்தாலும், டெங்கு கொசு புழு உற்பத்தி கண்டறியப்பட்ட காரணத்தாலும் மதுரை சரவணா செல்வரத்தினம் கடைக்குப் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது போன்று சுகாதாரமற்ற முறையில் இருக்கும் இடங்களுக்கும், டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக்கும் புழுக்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.