மகளிர் உரிமைத் தொகை திட்டம்- நாளை முதல் டோக்கன் விநியோகம் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்காக ஜூலை 20ஆம் தேதி நாளை டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் 1 கோடி மகளிர்க்கு ரூபாய் 1000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.இத்திட்டத்திற்காக வீடு வீடாக விண்ணப்பங்கள், டோக்கன்கள் வழங்கும் பணி நாளை முதல் தொடங்கப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக சென்னை ஆட்சியர், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு பணிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் அரசால் அச்சடிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு , அங்கிருந்து ரேஷன் கடை பணியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனவே ரேஷன் கடைகள் மூலம் தமிழகத்தில் விண்ணப்பத்திற்கான டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விண்ணப்பத்திற்கான முகாம்கள் ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முதல் கட்டமாக நடைபெறும் . இந்த விண்ணப்ப முகாம்கள் காலை 9.30 மணி முதல் 1 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் 5 30 மணி வரை நடைபெறும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது