போக்குவரத்து நெரிசல் – சென்னை மால்களுக்கு சி.எம்.டி.ஏ நிர்வாகம் நோட்டீஸ் !

போக்குவரத்து நெரிசல் – சென்னை மால்களுக்கு சி.எம்.டி.ஏ நிர்வாகம் நோட்டீஸ் !

சென்னை பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்கள் நோட்டீஸ் அனுப்ப சி.எம்.டி.ஏ நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. பொதுமக்களின் அனைத்து தேவைகளுக்கான வசதிகளும் ஒரே இடத்தில் கிடைப்பதால் குறிப்பாக விடுமுறை நாட்களில் மால்களில் மக்களின் வருகை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. சென்னையில் உள்ள வேளச்சேரி பினிக்ஸ் மால், அரும்பாக்கம் ஸ்கைவாக், கோயம்பேடு வி.ஆர் மஹால், வடபழனி, ராயப்பேட்டை, மயிலாப்பூர் போன்ற இடங்களில் திரையரங்குகளுடன் கூடிய பெரிய வணிக வளாகங்களான மால்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த இடங்களில் ஒரே நாளில் 1000 முதல் 2000 வரை வாகனங்கள் வந்து செல்வதால் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது ‌.

இதனால் அலுவலகத்துக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் தத்தளிக்கின்றனர். இதுபோன்ற மால்கள் அமைந்துள்ள  சாலைகளின் அகலம் 45 மீட்டர் ஆக இருக்க வேண்டும்,எனினும் 30 மீட்டருக்கு குறைவாகவே உள்ளது. இதனால் வணிக வளாகங்களுக்கு வரும் வாகனங்களால் நெரிசல் ஏற்படுகிறது.  இதன் படி பிரபல வணிக வளாகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வாகன நிறுத்துமிட வசதிகள் தொடர்பான விதிமீறல்களை ஆய்வு செய்ய முடிவு எடுத்துள்ளது. முதல்வதாக கோயம்பேட்டில் உள்ள வி.ஆர் மால் நிறுவனத்திற்கு சி.எம் டி.ஏ நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் விதி மீறும் வணிக வளாகத்திற்கு அடுத்தடுத்து நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது.

 

Related post

யூடியூப் எக்ஸ் வலைத்தளங்களுக்ககு- மத்திய அரசு நோட்டீஸ்

யூடியூப் எக்ஸ் வலைத்தளங்களுக்ககு- மத்திய அரசு நோட்டீஸ்

யூடியூப் வலைத்தளங்களுக்கு டெலிகிராமில் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவில் சிறார் துன்புறுதல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்க வேண்டும் என்று IT மத்திய தகவல் தொழில்நுட்ப…