கர்நாடக காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நீர் வழங்குவது குறித்து 50 ஆண்டுகளாக பிரச்சனை நிலவி வருகிறது. இதன் காரணமாக 2018 ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை ஆணையமும் ,காவிரி ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்பட்டது .எனினும் கர்நாடகா காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்குச் சரியாக தண்ணீர் திறந்து விடப்படுவதில்லை. இதன் காரணமாக காவிரி ஒழுங்காற்று பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனையின் படி பிப்ரவரி 1-ஆம் தேதி தமிழகத்தில் 2.5 டி எம் சி தண்ணீர் திறக்க வேண்டும் எனக் கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது. எனினும் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
இது தொடர்பாக புதுச்சேரியில் மார்ச் 21ஆம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டம் தலைவர் வினித் குப்தா தலைமையில் நடைபெறுகிறது.இதில் தமிழ்நாடு, கர்நாடகா ,கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .எனவே ஆலோசனைக் கூட்டத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான தண்ணீர் பங்கிட்டு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.