சமீபகாலமாக பள்ளி மாணவர்களிடையே தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இந்நிலையில் மாணவர்களின் நலனை கருதி மத்திய அரசானது புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. இந்த வழிகாட்டுதலில் பள்ளிகளில் சமூக நல குழுக்களை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. ஒரு மாணவரை மற்றொரு மாணவரை ஒப்பிட்டு கூறக்கூடாது என்றும், மனநிலை பாதிக்குமாறு கருத்துக்களை மாணவர்களிடம் கூறக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. பள்ளி முடிந்தவுடன் வகுப்பறைகளில் மேற்பார்வையிட்டு பூட்டிவிட்டு மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்
மேலும் இந்த வழிகாட்டுதல்களை முக்கியமாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசானது தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் தனது உத்தரவினை அனுப்பி வைத்துள்ளது.