ட்விட்டர் நிறுவனத்தின் புதிய லோகோ ‘எக்ஸ்’. சமூக ஊடங்களில் முதன்மையாக செயல்படும் ட்விட்டர் நிறுவனம் தொழில்துறையில் புதிதாக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின லோகோ நீலக்குருவிக்குப் பதிலாக X புதிய லோகோ மாற்றப்பட்டுள்ளது. உலக நம்பர் ஒன் கோடீஸ்வரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவத்தை வாங்கி உரிமையாளராக ஆகியுள்ளார். தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் நீலக்குருவி படத்திற்குப் பதிலாக ‘எக்ஸ்’ என்ற லோகோ மாற்றி புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். மேலும் ‘எக்ஸ்’ என்ற லோகோ பல்துறைத்திறன், படைப்பாற்றல், புதுமை மாற்றம் என சமூகத்தை அடையாளப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.
இந்த எக்ஸ் என்ற லோகோ ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் அலுவலத்தின் மீது ஒளிரவிடப்பட்டுள்ளது.இந்த எக்ஸ் என்ற லோகோ ட்விட்டரின் பயனர்களிடையே புதுவித சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் எக்ஸ் என்ற லோகோ மில்லியன் கணக்கானவர்களின் மாறுபட்ட எண்ணங்களை நிலை நிறுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிலாக எக்ஸ் என்ற பெயரில் மாற்றப்பட்டுள்ளது. தற்போது X com என்றஇணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. X com கிளிக் செய்தால் போதும் அது ட்விட்டரில் நுழைந்து சென்று விடுகிறது. இந்த ட்விட்டரின் நீலக் குருவி லோகோ நீக்கப்பட்டு X com லோகோ பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த எக்ஸ் காம் சமூக ஊடகம் எதிர்காலத்தில் மிகப்பிரமாண்டமாக செயல்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.